எங்கு பிறந்தாயோ?!
இங்குதான் வளர்க்கப்பட்டாய்
பதியமாய் வார்க்கப்பட்டாய்
பதிந்ததும் பெயர்த்து
தொட்டிக்கு வாழ்க்கைப்பட்டாய்
ஊர் ஊராய் திரிந்து
ஓர் வீட்டு முற்றத்தில் நீ
பிள்ளைக்கு நிகராய்
போற்றி பரிணமித்தாய்.
செம்மண் இட்டார்கள்;
தேயிலை தூள் போட்டார்கள்;
முட்டை ஓடும் உனக்கு
உரமாய் உருமாறிற்று
போதும் போதுமென்று
நீரூற்றி நிரைத்தார்கள்.
நிம்மதியாய் நீ
நிரந்தரம் ஆனபோது
மண்ணிலே ஏதோ மாற்றம்
உன்னுள்ளும் ஏதோ மருவு
உரமிட்டவர்கள் மருந்து தேடினர்
வேர் விட்ட இடத்தில் - ஏதோ
தூர் வெடும் பூச்சி
கண்டுபிடித்து பிணி தீர்க்குமுன் - நீயோ
வாடி வளைந்து
மடிந்தே போனாய்!
வேதனை தாங்கிய
வீட்டு முகங்களுக்கு
உன்னை அறிமுகப்படுத்திய
சுவற்றில் தொங்கும்
ரோஜாவின் ராஜா
ஜவகரின் சட்டையில் - நீ
சிரிப்பது மட்டும் சிலிர்ப்பு!
பன்னாட்டு மருந்து கம்பெனிகளும் அறிவியல் மோசடிகளும்
8 ஆண்டுகள் முன்பு


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக