வியாழன், 19 நவம்பர், 2009

ரோஜா கவிதை(கதை)

எங்கு பிறந்தாயோ?!
இங்குதான் வளர்க்கப்பட்டாய்
பதியமாய் வார்க்கப்பட்டாய்
பதிந்ததும் பெயர்த்து
தொட்டிக்கு வாழ்க்கைப்பட்டாய்
ஊர் ஊராய் திரிந்து
ஓர் வீட்டு முற்றத்தில் நீ
பிள்ளைக்கு நிகராய்
போற்றி பரிணமித்தாய்.
செம்மண் இட்டார்கள்;
தேயிலை தூள் போட்டார்கள்;
முட்டை ஓடும் உனக்கு
உரமாய் உருமாறிற்று
போதும் போதுமென்று
நீரூற்றி நிரைத்தார்கள்.
நிம்மதியாய் நீ
நிரந்தரம் ஆனபோது
மண்ணிலே ஏதோ மாற்றம்
உன்னுள்ளும் ஏதோ மருவு
உரமிட்டவர்கள் மருந்து தேடினர்
வேர் விட்ட இடத்தில் - ஏதோ
தூர் வெடும் பூச்சி
கண்டுபிடித்து பிணி தீர்க்குமுன் - நீயோ
வாடி வளைந்து
மடிந்தே போனாய்!
வேதனை தாங்கிய
வீட்டு முகங்களுக்கு
உன்னை அறிமுகப்படுத்திய
சுவற்றில் தொங்கும்
ரோஜாவின் ராஜா
ஜவகரின் சட்டையில் - நீ
சிரிப்பது மட்டும் சிலிர்ப்பு!

மானுட வாழ்வின் நோக்கமும் இலக்கும்

மானுட வாழ்வின் நோக்கமே அதற்கு அர்த்தம் பொதித்தல்தான்!

ஜனித்தோம், உயிர்த்தோம், மரித்தோம் என்ற பிற உயிரின வாழ்விற்கு மாறாகவும் மேலாகவும்

பிறந்தோம், வாழ்ந்தோம், வாழ்வாங்கு வாழ்ந்தோம் என்பதே அர்த்தம் பொதித்தல்.


அறிவார்ந்த மக்கலெல்லாம் தாம் இங்கு பெற்ற அறிவாற்றலுக்கு பிரதி பலனாக உலக மானுட வாழ்விற்கு தன்னாலானதை திருப்பிச் செலுத்தத்தான் விழைவர். இது பெற்றதற்கான பிரதிபலனே அன்றி புதிய பலன் எதிர் நோக்கி அல்ல. இதனால்தான் கூட்டு வாழ்வு, குடும்ப வாழ்வு, சகவாழ்வு, சுக வாழ்வு என்பதெல்லாம் சாத்தியமாகின்ற்ன.


ஜட உடலால் உயிருக்கு மரியாதை செலுத்தாமல் உயிற்பான வாழ்வால் ஜட உடலுக்கு பெருமை சேர்ப்பதே அர்த்தமுள்ள வாழ்க்கை. அது போன்ற முயற்ச்சியே நல வாழ்வுக் கருத்துக்களைப் பரப்புதல்.


உலக வாழ்வெனும் வாய்ப்பை வகையாக வாழத்தான் உணவையே மருந்தாக உடலையே

கோயிலாக போற்றுதலாம்.

ஐம்புலன்களிலேயே, மெய்யை மேம்படுத்த வாய்க்கே வாய்ப்பு அதிகம்.

முதல்வதாக,

வகையறிந்து, சுவையறிந்து உடலுக்கான உணவை உட்கொள்ளுதல்.

இரண்டாவதாக,

தொகையும் தொண்டையும் அறிந்து மனதிற்கும் அறிவிற்கும் உயிற்பிற்குமான மொழி பகற்தல்.


வாய் மூடி மௌனமாக பல்வேறு இனியவற்றை கண், காது, மூக்கு வழியாக உணர்ச்சியால் உட்கவர்ந்து உணர்வு பெறுகிறோம். வகையறிந்து உணவருந்தினால் பிணி, மூப்பு, சாக்காடு

நீக்கி உயிர்ப்பான ஆயுள் கூட்டலாம்.

கண்டதை உண்டு கதி கலங்குதலும் கண்ணா பின்னா என்று பேசி மனங் கலங்கவைப்பதும் நாவினால்தான். எனவே, நாவடக்கத்தோடான நாவலம் நம்மை நல் இலக்கு நோக்கி இட்டுச் செல்லும்.

இந்நெறியை இப்படிச் சொல்லலாம்:

கண் போன போக்கில்

கால் போகலாமா?

கால் போன போக்கில்

மனம் போகலாமா?

மனம் போன போக்கில்

மனிதன் போகலாமா?

மனிதன் போன பாதையை

மறந்து போகலாமா?


பிறந்தோம், உழன்றோம், செத்தோம் என்பதல்லாமல்,

இருந்தாலும் மறைந்தலும்

பேர் சொல்ல வேண்டும்;

இவர்போல யாரென்று

ஊர் சொல்லவேண்டும்.


நம்மில் பலர் இருக்கும்போதே வாழ் நாளை எண்ணி விதிர்துப்போகிறோம். காரணம், உடலோம்பல் மூலமாக, உயிரோம்பல் அறியாததே. எனவே, நாவடக்கி உல்லோம்புவோம்;

சந்ததிக்கும் போதிப்போம்! அதற்கு, நம் கண்ணோட்ட்த்தை அடிப்படையிலேயே மாற்றவேண்டும்.

இம் மாற்றமே நமக்கு மானுட வாழ்வின் திக்கையும் திசையையும் நமக்கு காட்டும். இவ்வகை

யறிந்தால், வையத்துல் வாழ்வாங்கு வாழும் இலக்கை எய்தி வானுரையும் தெய்வத்திற்கு நிகராவோம்.


கண்ணோட்ட மாற்றமென்பது முதலில் நமது வாழ்நாள் என்பது வருடங்களில் இல்லை என்பதில் தொடங்குகிறது. அது எங்ஙனம்?........சிந்திப்போம். .......தொடரும்....